Monday, November 5, 2012

The Goat And The Horse!!! - Learn to live without recognition


The Goat And The Horse!!! There was a farmer who had a horse and a goat….. One day, the horse became ill and he called the veterinarian, who said: - Well, your horse has a virus. He must take this medicine for three days. I'll come back on the 3rd day and if he's not better, we're going to have to put him down. Nearby, the goat listened closely to their conversation. The next day, they gave him the medicine and left. The goat approached the horse and said: - Be strong, my friend. Get up or else they're going to put you to sleep! On the second day, they gave him the medicine and left. The goat came back and said: - Come on buddy, get up or else you're going to die! Come on, I'll help you get up. Let's go! One, two, three... On the third day, they came to give him the medicine and the vet said: - Unfortunately, we're going to have to put him down tomorrow. Otherwise, the virus might spread and infect the other horses. After they left, the goat approached the horse and said: - Listen pal, it's now or never! Get up, come on! Have courage! Come on! Get up! Get up! That's it, slowly! Great! Come on, one, two, three... Good, good. Now faster, come on...... Fantastic! Run, run more! Yes! Yay! Yes! You did it, you're a champion!!! All of a sudden, the owner came back, saw the horse running in the field and began shouting: - It's a miracle! My horse is cured. We must have a grand party. Let's kill the goat!!!! The Lesson: this often happens in the workplace. Nobody truly knows which employee actually deserves the merit of success, or who's actually contributing the necessary support to make things happen. Remember……… LEARNING TO LIVE WITHOUT RECOGNITION IS A SKILL!!!! If anyone ever tells you that your work is unprofessional, remember: Amateurs built the Ark [which saved all the species] and professionals built the Titanic [all died tragically]

Friday, November 2, 2012

This too shall change!


ஒரு அரசர் தன் மந்திரிகளை அழைத்து, “நான் கேட்கும் கேள்விக்கு யார் சரியான பதில் சொல்கிறீர்களோ அவர்களுக்கு சிற்றரசர் பதவி தருகிறேன்.” என்றவர், “என் கேள்வி இதுதான்” என பேச தொடங்கினார். “ஒருவர் வெற்றியடைந்த பிறகு, அந்த நபரிடம் ஒரு வார்த்தை சொன்னவுடன் அந்த வெற்றியை பெற்ற நபர் மனம் கலங்க வேண்டும். அதே வார்த்தையை தோல்வியடைந்த நபரிடம் சொன்னால், அந்த தோல்வியடைந்த நபர் அந்த வார்த்தையை கேட்டு மகிழவேண்டும். அப்படி என்ன வார்த்தை சொல்வீர்கள்.?” என கேட்டார் மன்னர். இதை கேட்ட மந்திரிகளுக்கு குழப்பம். “அது எப்படி? ஒரே வார்த்தையை வெற்றி பெற்றவனிடம் சொன்னால் அவன் கலங்க வேண்டும், தோல்வியடைந்தவனிடம் சொன்னால் அவன் மகிழவேண்டுமா? அது என்ன வார்த்தையாக இருக்கும்?” என்று தலையை பீய்த்துக் கொண்டு யோசித்தார்கள். அப்போது ஒரு மந்திரி மட்டும் எழுந்து, “அரசே, வெற்றியடைந்தவனிடமும் தோல்வியடைந்தவனிடமும், “இதுவும் மாறும்” என்ற இந்த வார்த்தையை சொன்னால் போதும். வெற்றி பெற்றவன் வருங்காலத்தை நினைத்து அஞ்சுவான், தோல்வியடைந்தவன் மன தெளிவும் நம்பிக்கையும் பெற்று மகிழ்ச்சி அடைவான்.” என்றார். அரசர், அந்த அமைச்சரை பாராட்டி பரிசுகளை தந்து, சிற்றரசர் பதவி வழங்கி கௌரவித்தார். ஆம். வாழ்வில் எது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாறும். அந்த மாற்றத்தை சர்வ சாதாரணமாக எடுத்துக்கொண்டோம் என்றுச் சொன்னால், தோல்வியை கண்டு கலங்கி, மனம் துவண்டு போகாது. மனஅழுத்தம் என்பதும், குழப்பம் என்பதும் வாழ்நாள் முழுவதும் நம்மை நெருங்காது. வெற்றி நிச்சயம் இது வேதமந்திரம் http://bhakthiplanet.blogspot.in/2012/10/blog-post_31.html ஒரு அரசர் தன் மந்திரிகளை அழைத்து, “நான் கேட்கும் கேள்விக்கு யார் சரியான பதில் சொல்கிறீர்களோ அவர்களுக்கு சிற்றரசர் பதவி தருகிறேன்.” என்றவர், “என் கேள்வி இதுதான்” என பேச தொடங்கினார். “ஒருவர் வெற்றியடைந்த பிறகு, அந்த நபரிடம் ஒரு வார்த்தை சொன்னவுடன் அந்த வெற்றியை பெற்ற நபர் மனம் கலங்க வேண்டும். அதே வார்த்தையை தோல்வியடைந்த நபரிடம் சொன்னால், அந்த தோல்வியடைந்த நபர் அந்த வார்த்தையை கேட்டு மகிழவேண்டும். அப்படி என்ன வார்த்தை சொல்வீர்கள்.?” என கேட்டார் மன்னர். இதை கேட்ட மந்திரிகளுக்கு குழப்பம். “அது எப்படி? ஒரே வார்த்தையை வெற்றி பெற்றவனிடம் சொன்னால் அவன் கலங்க வேண்டும், தோல்வியடைந்தவனிடம் சொன்னால் அவன் மகிழவேண்டுமா? அது என்ன வார்த்தையாக இருக்கும்?” என்று தலையை பீய்த்துக் கொண்டு யோசித்தார்கள். அப்போது ஒரு மந்திரி மட்டும் எழுந்து, “அரசே, வெற்றியடைந்தவனிடமும் தோல்வியடைந்தவனிடமும், “இதுவும் மாறும்” என்ற இந்த வார்த்தையை சொன்னால் போதும். வெற்றி பெற்றவன் வருங்காலத்தை நினைத்து அஞ்சுவான், தோல்வியடைந்தவன் மன தெளிவும் நம்பிக்கையும் பெற்று மகிழ்ச்சி அடைவான்.” என்றார். அரசர், அந்த அமைச்சரை பாராட்டி பரிசுகளை தந்து, சிற்றரசர் பதவி வழங்கி கௌரவித்தார். ஆம். வாழ்வில் எது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாறும். அந்த மாற்றத்தை சர்வ சாதாரணமாக எடுத்துக்கொண்டோம் என்றுச் சொன்னால், தோல்வியை கண்டு கலங்கி, மனம் துவண்டு போகாது. மனஅழுத்தம் என்பதும், குழப்பம் என்பதும் வாழ்நாள் முழுவதும் நம்மை நெருங்காது. வெற்றி நிச்சயம் இது வேதமந்திரம் http://bhakthiplanet.blogspot.in/2012/10/blog-post_31.html

Saturday, October 27, 2012

DOORS


We are “Doors” Michael, a co-learner at my spiritual counseling lectures lit a spark in my mind to ruminate on “Door”. He is a lawyer and a prison chaplain. He is gentlest of persons around. “Word of God is a door, where we pass through God and come out of Him”, he said. “Yes, there can be many doors to God and to ourselves”, I said to myself. Doors—we pass in and out of them so many times in any given day. Some doors are locked permanently and we wonder what the use of them is. Some are wide open all the time; still make us wonder what the use of them is. Some are opened at specific hours giving us restrictions. Some are very securely locked though safe-keeping nothing of great value. Sometimes we also wonder at some spaces needing doors and locks but left unguarded. Why there are door? What are they for? We have created doors and we maintain and use them for various reasons. Doors lock us indoors and keep us out of danger… Doors protect valuables… Doors keep strangers at bay… Doors give us privacy and keep us in peace… Doors keep us secluded away from intruders… Doors restrict un-appointed and insensitive visitors… Doors always say, “use the other door”… Doors always warning, “Do not enter”… Doors announcing, “You are welcome”… We interact with and through doors. We slam doors when we are annoyed. We peep through when we need secret information. We keep watching through them when expecting a loved one. We sleep near them when we are in anxiety. We leave them open when we feel like welcoming. We even leave notice on them when we don’t want to be disturbed. We give numerous instructions to our doors to speak on our behalf. Doors symbolize each one of us. They tell us who we are and what we are. They represent us in many ways. They can be the other side of each one of us. They speak many things about our personality, our attachments, belongings, and things we have. Doors are symbols of our personality and our relationships. What kind of a door are we? Door wide-open? Door secularly locked? Door having a lock with many keys? Door with lenses? Doors with regular messages? Fr. Arasu.

Monday, May 7, 2012

The empty Boat - Anger & englightenment


லின் சீ (Lin Chi) என்ற பிரபல ஜென் துறவிக்குச் சிறு வயதில் இருந்தே படகில் பிரயாணம் செய்வதில் மிகுந்த ஈடுபாடு. அவரிடம் ஒரு சிறு படகு இருந்தது. அருகில் இருந்த ஏரிக்குச் சென்று அந்தப் படகில் மணிக்கணக் கில் இருப்பார். பல சமயங்களில் கண்களை மூடித் தியானம் செய்வது கூட படகில் இருந்தபடி தான். ஒரு நாள் அவர் படகில் தியானம் செய்து கொண்டு இருந்த போது காலி யான வேறொரு படகு காற்றின் போக்கில் மிதந்து வந்து அவரது படகை இடித்தது. தியானத்தில் இருந்த அவருக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. யாரோ அஜாக்கிரதையாக படகை ஓட்டிக் கொண்டு வந்து தம் படகில் மோதி விட்டதாக எண்ணி கண்களைத் திறந்து திட்ட முற்பட்டார். பார்த்தால் காலிப் படகு ஒன்று தான் அவர் முன்னால் இருந்தது. "என் கோபத்தை அந்தக் காலிப் படகின் மீது காட்டிப் பயன் இல்லை. மௌனமாகத் தான் நான் ஞானம் பெற்றேன். அந்தப் படகு எனக்கு குருவாக இருந்தது. இப்போதெல்லாம் யாராவது வந்து என்னை அவமானப்படுத்தவோ, மனதைப் புண்படுத்தவோ முற்பட்டால் புன்னகையுடன் "இந்தப் படகும் காலியாகத் தான் இருக்கிறது" என்று எனக்குள் கூறி கொண்டு அமைதியாக நகர்வது எனக்குச் சுலபமாகி விட்டது" என்று அவர் பிற்காலத்தில் எப்போதும் கூறுவார். ஜென் தத்துவங்கள் ரத்தினச் சுருக்கமானவை; கருத்தாழம் மிக்கவை. இந்தக் காலிப் படகின் பாடமும் நன்றாகச் சிந்தித்தால் நமக்கு விளங்கும். பொதுவாக நாம் நமக்கு ஏற்படும் கோபத்தை இரண்டு விதங்களில் கை யாள்கிறோம். ஒன்று, காரணமாகத் தோன்றும் மனிதர்கள் மீது கோபத் தை வெளிப்படுத்துகிறோம். அல்லது கோபத்தை அடக்கிக் கொண்டு விழுங்கிக் கொள்கிறோம். பிறர் மீது கோபித்து, அனல் கக்கி ஓயும் போது பெரும்பாலும் நாம் மகிழ்ச்சியாய் இருப்பதில்லை. குற்ற உணர்வு, பச்சாதாபம், தேவை இருந்திருக்கவில்லை என்கிற மறுபரிசீலனை என்று பல்வேறு உணர்வு களால் பாதிக்கப்படுகிறோம். இது ஒரு புறமிருக்க இதன் விளைவாக அந்தப்பக்கமும் கோபமும், வெறுப்பும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித் தால் விளைவுகள் விபரீதமே. ஏற்படும் கோபத்தை அடக்கி நமக்குள்ளே விழுங்கிக் கொண்டாலும் கோபம் மறைவதில்லை. உள்ளே சேர்த்து வைத்த கோபம் என்றாவது எப்போதாவது வெளிப்பட்டே தீரும். அது இயற்கை. அது நம் கோபத்திற்குக் காரணமான நபர் மீதிருக்கலாம். அல்லது பாவப் பட்ட வேறு யார் மீதாகவோ இருக்கலாம். விழுங்கியது வெளிப்படவே செய்யும். நமக்குள்ளே தங்கி இருந்ததன் வாடகையாக அல்சர், இரத்தக் கொதிப்பு முதலான நோய்களைத் தந்து விட்டே கோபம் நம்மை விட்டு அகலும். ஆக இந்த இரு வழி முறைகளும் நம்மைத் துன்பத்திற்கே அழைத்துச் செல்கின்றன. பின் என்ன செய்வது என்ற கேள்விக்குப் பதில் தான் காலிப்படகுப் பாடம். கோபமே அவசியமில்லை, கோபத்திற்கு யாரும் காரணமில்லை என்று உணர்ந்து அந்தக் கணத்திலேயே தெளிவடைவது தான் கோபத்திற்கு மருந்து. ஒரு நண்பர் வந்து நம்மைக் கிண்டல் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். பெரும்பாலும் நாம் சிரித்து பதிலுக்கு நாமும் ஏதாவது கிண்டலாக சொல்வோம். ஆனால் ஒரு நாள் நாம் பல பிரச்னைகளால் மனநிலை சரியில்லாமல் இருந்தால் அன்று அந்த நண்பரின் கிண்டல் நம்முள் ஒரு எரிமலையையே ஏற்படுத்தக்கூடும். அவரது வார்த்தை களுக்கு அந்த நேரம் ஒரு தனி அர்த்தம் தெரியும். மனம் வீணாகப் புண் படும். கடுகடுப்புக்கு முகமும், கடுஞ்சொற்களுக்கு நாக்கும் தயாராகும். இந்தச் சிறிய தினசரி அனுபவம் ஒரு பேருண்மைஅயை வெளிப்படுத்து வதை நாம் சிந்தித்தால் உணரலாம். அடுத்தவரது சொற்களோ, செயல் களோ மட்டுமே கோபத்திற்குக் காரணம் என்றால் அவற்றை எப்போதும் கோபமாகத் தான் எதிர்கொள்வோம். ஆனால் உண்மையில் கோபமும், கோபமின்மையும் நம் மனப்பான்மையையும், மனநிலையையும் பொறுத்தே அமைவதை நம் தினசரி வாழ்விலேயே பார்க்கிறோம். வறண்ட கிணற்றில் விடப்படும் வாளி வெற்று வாளியாகவே திரும்பும். நீருள்ள கிணற்றில் விடப்படும் வாளியே நீருடன் திரும்பும். உள்ளே உள்ளதை மட்டுமே வாளியால் வெளியே கொண்டு வர முடியும். வாளியால் நீரை உருவாக்க முடியாது. அடுத்தவர்கள் வாளியைப் போன்றவர்கள். அவர்களது சொற்களும் செயல்களும் நமக்குள்ளே சென்று வெளிக் கொணர்வது நமக்குள்ளே சென்று வெளிக் கொணர்வது நமக்குள்ளே இருப்பதைத் தான். அது கோபமாகட்டும், வெறுப்பாகட்டும், அன்பாகட்டும், நல்லதாகட்டும், தீயதாகட்டும். அவர்கள் நம்மில் வெளிக் கொணர்வது நாம் நம் ஆழ்மனதில் சேர்த்து வைத்திருப்பதையே. அந்த விதத்தில் அவர்கள் நமக்கு உதவியே செய்கிறார்கள். நமக்குள் என்ன உள்ளது என்பதை அவர்கள் நமக்கு உனர்த்துகிறார்கள். கம்ப்யூட்டர்கள் பதிவு செய்யப்பட்ட ப்ரோகிராம்கள்படி இயங்குகின்றன. அதுபோல நாமும் நம் ஆழ்மனதில் பதிவு செய்து கொண்டுள்ள ப்ரோ கிராம்கள் படியே உந்தப்பட்டு செயல்படுகிறோம். அதில் எத்தனையோ பதிவுகள் தவறானவை என்பதை உணராமலேயே பலரும் வாழ்ந்து முடித்து விடுகிறோம். இதெல்லாம் கோபப்படத் தக்கவை, சொற்களாலோ, செயல்களாலோ தகுந்த பதிலடி தரத் தக்கவை என எத்தனையோ விஷயங்களை நாம் ஆழ்மனதில் பதிவு செய்து வைத்து இருக்கிறோம். அதன்படி அப்போ தைய சூழ்நிலையையும், மனநிலையையும் பொறுத்து சிந்திக்காமல் பேசி விடுகிறோம் அல்லது செயல்பட்டு விடுகிறோம். எனவே ஒவ்வொன்றையும் நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம், நமது பதில் நடவடிக்கைகள் எப்படி அமைகின்றன என்பது நம்மைப் பொறுத்தே இருக்கிறது. காரணமாகத் தெரியும் மற்றவர்கள் முன்பு குறிப்பிட்டது போல் காலிப்படகுகள் அல்லது வாளிகளே. இந்த உண்மையை நம் ஆழ்மனதில் பதிய வைத்து தவறாக மற்றவர் களைக் காரணம் காணும் ப்ரோகிராம்களைத் திருத்திக் கொள்வது மிகவும் நல்லது. கோபம் தற்காலிகமாய் பைத்தியம் பிடிப்பது போன்றது என்பார்கள். கோபப்படுவது அதை அடையாளம் காட்டுவதற்குச் சமம். ஆராய்ந்து அறியாமல், கோபத்தைக் காட்டாமல் அடக்குவது என்பது உண்மையில் கோபத்தை ஒத்திப் போடுதலே. எனவே இரண்டையும் தவிர்த்து விட்டு அமைதியாகவும் தெளிவாகவும் சூழ்நிலையைக் கையாளுவோம். ஒருவர் கோபமூட்ட முனைகையில் அவரது செய்கை முக்கியமல்ல, அதை நாம் எப்படி எதிர் கொள்கிறோம் என்பது தான் முக்கியம் என்பதை எப்போதும் நினைவில் நிறுத்திக்கொள்ளவேண்டும். பல நேரங்களில் மௌனமே உத்தமம். புன்னகையே சிறந்த பதில். வார்த்தைகளில் பதில் அவசியம் என நாம் உணரும் போது சற்றும் கோபம் கலக்காமல் அமைதியாய் தெளிவாய் பதில் அளிக்க வேண்டும். உங்கள் அமைதியைக் குலைக்கும் அதிகாரத்தை நாமாக மற்றவர்களுக்குத் தந்தால் ஒழிய அவர்கள் அதைப் பெற முடியாது என்பதை மறந்து விடக்கூடாது. அரிஸ்டாடில் சொன்னது போல் "கோபப்பட ஆயிரம் காரணங்கள் இருக்க லாம். ஆனால் அவற்றில் ஒன்றும் சரியானதாக இருக்காது" என்பதை உணருவோம். கோபம் பிறக்கும் அக்கணமே அதன் அவசியமின்மையை உணர்ந்து, அழித்து, அமைதி காக்கக் கற்றுக் கொள்ளுவோம். நட்புகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்...